கடந்த 17-1-2025 அன்று முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்த தூத்துக்குடி மாநகரம் வண்ணார் 1வது தெருவை சேர்ந்த திரு M.நாகராஜன் – சுமதி தம்பதியினருடைய ஒரே மகள் வைஷ்ணவி (வயது 13) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்ததை கேள்விப்பட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதாஜீவன் அவர்கள் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினரை அவர்கள் இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறிய போது.,
தூத்துக்குடியில் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் - 2025 இறுதிச்சுற்றுப் போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற...
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்ற கழக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்களுடன் கலந்துகொண்டு உரையாற்றியபோது. உடன் தலைமை கழக பேச்சாளர் திரு. சூர்யா வெற்றிகொண்டான், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. சின்னப்பாண்டியன், திரு. சுப்பிரமணியன், திரு. முருகேசன், திரு. கருப்பசாமி, திரு. ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!
தூத்துக்குடி மாநகரம் – 49வது வார்டுக்கு உட்பட்ட ராஜபாண்டி நகர் பகுதியில் கடந்தாண்டு மழை வெள்ளத்தின் போது வீடுகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு JSW நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் வீடுகள் கட்டித் தர அடிக்கல் நாட்டியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. ராமகிருஷ்ணன், JSW அலுவலர் திரு. சந்திரமோகன், வட்டச் செயலாளர் திரு. முக்கையா, மாமன்ற உறுப்பினர் திருமதி. வைதேகி உள்ளிட்டோர்.!