Jan 6 8:00 am - 11:30 pm மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் அறிவுறுத்தலின்படி, இன்று தலைமைச் செயலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம், POCSO வழக்குகளின் நிலை ஆகியவை குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.!
Jan 7 8:00 am - 11:30 pm மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. M. K. Stalin அவர்கள் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, VGS பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரி மேற்படிப்பு செல்லும் மாணவியரும் இந்த #புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.!
Jan 10 8:00 am - 11:30 pm தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறையின் செயல்பாடுகள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.!
Jan 12 8:00 am - 11:30 pm தமிழர் திருநாளை முன்னிட்டு தமிழன்டா கலைக்குழு, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குரூப்ஸ், வாசன் கண் மருத்துவமனை உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்த செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் கலைச் சங்கமம் விழாவில் கலந்துகொண்டு கலைக்குழுவினருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தபோது.!
Jan 13 8:00 am - 11:30 pm தூத்துக்குடி மாநகரம் – 18வது வார்டுக்கு உட்பட்ட நிகிலேசன் நகர் பகுதியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி, கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் திரு. ஜான் சீனிவாசன் உள்ளிட்டோர்.!
Jan 14 All day பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரம் – 19வது வார்டுக்கு உட்பட்ட மகிழ்ச்சிபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவில் தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு. ராஜ்மோகன் செல்வின், மாமன்ற உறுப்பினர் திருமதி. சோமசுந்தரி, வட்டச் செயலாளர் திருமதி. பத்மாவதி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. செல்வின் உள்ளிட்டோர்.!