October 5, 2024 @ 8:00 am - 8:00 pm தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு கழகத் தலைமையால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் மாண்புமிகு அமைச்சர் – மாவட்டச் செயலாளர் அக்கா அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றபோது.!
October 6, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியை இன்று பார்வையிட்டு அங்குள்ள முத்தமிழறிஞர் பதிப்பகத்தில் கழக நிர்வாகிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் புத்தகங்கள் வழங்கியபோது.!
October 6, 2024 @ 8:00 am - 8:00 pm தூத்துக்குடி மாநகரம் – 12வது வட்டப் பகுதியில் கழகத்தின் இரு வண்ணக் கொடியை ஏற்றிவைத்த மாண்புமிகு அமைச்சர் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் – அக்கா Geetha Jeevan MLA – DMK அவர்கள்.!
October 8, 2024 @ 8:00 am - 5:00 pm நேற்று (07.10.2024) சென்னை, எழும்பூரில் திருநங்கைகள் நல வாரியத்தின் 9-வது கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் திருமதி ஏ.எஸ். குமரி மற்றும் திருநங்கைகள் நல வாரிய அலுவல்சார், அலுவல் சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
October 11, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவில் திருப்பணிக்காக ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கிட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இது குறித்த வழக்குக்கு உறுதுணையாக இருந்ததற்காக தூத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் என்னை எனது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.!
October 16, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி – கட்டபொம்மன் நகரில் ஊமைத்துரை தொண்டர் படையின் சார்பில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை இன்று திறந்து வைத்தபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்.!
October 16, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாமில் பதிவு செய்த பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகள் வழங்கியபோது. உடன் வட்டாட்சியர் திரு. முரளிதரன், மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் திருமதி. அதிர்ஷ்ட மணி உள்ளிட்டோர்.!
October 17, 2024 @ 8:00 am - 5:00 pm தமிழ்நாடு முதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்
October 17, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி – முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான 2வது கயாக்கிங் மற்றும் துடுப்புப் படகு போட்டியினை இன்று துவக்கி வைத்தபோது.
October 17, 2024 @ 8:00 am - 5:00 pm மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி கோரம்பள்ளம் 5வது வடிகால் மற்றும் மீன்வளக் கல்லூரி அருகே ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு மேற்கண்டபோது. உடன் மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத் இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரபு மற்றும் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன் உள்ளிட்டோர்.!