October 17, 2024 @ 8:00 am - 5:00 pm தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்ட சக்கர நாற்காலி டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற பொன் மனிஷா, ஸ்னோஸ் எரிக் ஷெர்லி மற்றும் பத்மநாபன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த போது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு. பாலகுருசாமி, மாநகர அமைப்பாளர் திரு. ஆரோக்கிய ராபின் அசோகன் உள்ளிட்டோர்.
October 18, 2024 @ 12:00 am - 11:59 pm தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் முகாமில் (3வது நாள்) பதிவு செய்த பயனாளிகளுக்கு மாண்புமிகு அமைச்சர் அக்கா கீதாஜீவன் அவர்கள் காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.!
October 18, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி மாவட்டம் – புதூர் ஊராட்சி ஒன்றியம் – நாகலாபுரத்தில் உள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு, மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. ஐஸ்வர்யா உள்ளிட்டோர்.!
October 18, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் இனாம் சுப்பிரமணியபுரத்தில் 9.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை, சிவஞானபுரத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலக கட்டிடம், பிள்ளையார் நத்தத்தில் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தபோது. உடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத் உள்ளிட்டோர்.
October 19, 2024 @ 12:00 am - 11:59 pm தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கும் முகாமில் தன்னார்வலராக கலந்து கொண்டு பணி செய்ததற்காக அக்கா : மாண்புமிகு அமைச்சர் Geetha Jeevan MLA – DMK அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது.!
October 19, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் தருவை விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி போட்டிகள் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
October 19, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற குடும்ப அட்டை சிறப்பு முகாமை பார்வையிட்ட போது. உடன் வட்டாட்சியர் திரு. முரளிதரன் மற்றும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் திரு. இன்பா ரகு உள்ளிட்டோர்.!
October 19, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடி வருகை தந்த மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. TRB Rajaa அவர்களுடன் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் டைடல் நியோ எனும் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தபோது.!
October 19, 2024 @ 8:00 am - 5:00 pm தூத்துக்குடியில் 1934ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பாரம்பரியம் நிறைந்த முத்து நகர் பெண்கள் நல மையத்தின் வெள்ளிச்சந்தை நிகழ்வில் பங்கேற்றபோது. உடன் அமைப்பின் தலைவர் திருமதி. ஷீலா தமிழரசு, செயலாளர் திருமதி. மகேஸ்வரி, துணை மேயர் திருமதி ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர் திருமதி. அன்னலட்சுமி உள்ளிட்டோர்.!
October 20, 2024 @ 12:00 am - 11:59 pm அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எப்போதும் முன்னிலை வகிக்கும் அன்பு அக்கா : அமைச்சர் Geetha Jeevan MLA – DMK அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எப்போதும் முன்னிலை வகிக்கும் அன்பு அக்கா : அமைச்சர் Geetha Jeevan MLA - DMK...