Geetha Jeevan MLA-DM

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெறும் வகையில் கோவில்பட்டி – சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை துவக்கி வைத்து தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி உரையாற்றியபோது. உடன் மாவட்ட தொமுச கவுன்சில் செயலாளர் திரு. சுசி. ரவீந்திரன், நகரச் செயலாளர் திரு. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் திரு. முருகேசன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. கருப்பசாமி, செயற்குழு உறுப்பினர் திரு. என்.ஆர்.கே ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ஏஞ்சலா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் திரு. ஆனந்த் பிரகாஷ் உள்ளிட்டோர்.!

தூத்துக்குடி DSF Grand Plaza -வில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry) ஒருங்கிணைத்த 6வது தேசிய உப்பு மாநாடு நிகழ்வில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் இந்திய தொழில் கூட்டமைப்பின் தூத்துக்குடி தலைவர் திரு. செலஸ்டின் வில்லவராயர், CII தேசிய உப்பு மாநாடு தலைவர் திரு. மைக்கேல் மோத்தா, இந்திய உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் திரு. பாரத் ரவல், தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர். மகேஸ்வரன் இ.ஆ.ப., உள்ளிட்டோர்.!