இன்னும் இன்னும் உங்களுக்காக உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தை வழங்குவதாக அமைந்தது இன்றைய #WomensDay2025 விழா!
அனைத்துத் துறைகளிலும் ஆணுக்குப் பெண் சரிநிகர் எனப் பெண்கள் சாதித்துவிட்டார்கள். ஆனால், ஆணாதிக்க மனப்பான்மை மறையும்போதுதான் இந்த வளர்ச்சி சிறப்பு பெறும்; பெண்களுக்கு எதிரான வன்முறை எண்ணம் முடிவுக்கு வரும்; இத்தகைய விழாக்களும் முழுமை பெறும்! அத்தகைய சிந்தனை வளர்ச்சியையும் எட்டுவோம்!
மகளிரின் உரிமையை உறுதிசெய்வதை உங்கள் சகோதரனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான #DravidianModel அரசு என்றும் தொடரும்! மகளிர் உயர மாநிலம் உயரும்! #IWD2025