தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் அளித்த கோரிக்கையை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் 4வது தெரு கிழக்கு பகுதியில் பொதுமக்கள் சாலை வசதி செய்து தருமாறு அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் ஜான் சீனிவாசன், வட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, வட்ட பிரதிநிதி வேல்முருகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.