Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து

October 29, 2024 @ 8:00 am - 5:00 pm

திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி முன்னெடுத்த என் உயிரினும் மேலான எனும் தலைப்பிலான பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இருந்து தேர்வான மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய், கீழமுடிமண் பகுதியைச் சேர்ந்த உமாராணி ஆகியோருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், பிரதீப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர்கள் சங்கர நாராயணன், பிரவீன் குமார் மற்றும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னதுரை, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Details

Date:
October 29, 2024
Time:
8:00 am - 5:00 pm