Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

புத்தக வண்டி ஒருங்கினைப்பாளருக்கு அமைச்சர் கீதா ஜீவன் வாழ்த்து!

March 23

தூத்துக்குடியில் குமிழ்முனை புத்தக வண்டி ஒருங்கினைப்பாளரை பாராட்டி அனைவரும் இலவசமாக வாசிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட நூல்களை அமைச்சா் பெ. கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்தவா் சைமன் (32). வ.உ.சி. துறைமுக ஒப்பந்தப் பணியாளா். இவா், வஉசி கல்லூரி முன் ‘குமிழ்முனை’ என்ற பெயரில் மொபெட்டில் புத்தகங்களை வைத்து, அனைவரும் வாசிப்பதற்காக நாள்தோறும் இரவு 8 முதல் 10 மணிவரை இலவசமாக வழங்கி வருகிறாா். இங்கு, சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை நூல்களை வாசித்துச் செல்கின்றனா்.

இந்நிலையில், அவரது சமூக சேவையைப் பாராட்டும் விதமாக, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் ஞாயிற்றுக்கிழமை, சைமனை தனது வீட்டுக்கு வரவழைத்து பல்வேறு எழுத்தாளா்களின் 100-க்கும் மேற்பட்ட நூல்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன் ஜேக்கப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Details

Date:
March 23