தூத்துக்குடி மாநகரம் – 53வது வார்டுக்கு உட்பட்ட வடக்குத் தெரு வடபாகம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் குடியிருப்புகளுக்குள் தங்க முடியாமல் சாலையோரம் பொதுமக்கள் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் அங்கு நேரில் சென்று சாலையோரம் தங்கியிருந்த மக்களைச் சந்தித்து அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன், அவர்களது குடியிருப்புப் பகுதிகளை சீரமைத்துத் தருவதாக உறுதியளித்தார்.
உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. மேகநாதன், வட்டப் பொறுப்பாளர் திரு. மனோகர், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!