தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று வட்ட செயலாளர் மூக்கையா மற்றும் கவுன்சிலர் வைதேகி ஆகியோர் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் இன்று அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பு கருதி புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை துவக்கி வைக்கும் விழா மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்து பொங்கல் திருநாள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.