தூத்துக்குடி மாநகரம் – முத்தையாபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திரு. சிவபாலன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் திரு. பாலகுருசாமி, திரு. நிர்மல்ராஜ், பகுதி செயலாளர்கள் திரு. மேகநாதன், திரு. ரவீந்திரன், திரு. ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் திரு. விஜயகுமார், மகளிரணியை சேர்ந்த திருமதி. ஜெயக்கனி, திருமதி. வளர்மதி உள்ளிட்டோர்.!