தூத்துக்குடி மாநகரம் – போல்பேட்டை பகுதிக்கு உட்பட்ட 1,13,14 ஆகிய வார்டுகளுக்கான பாக முகவர்கள் கூட்டம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், 20வது வார்டுக்கான பாக முகவர்கள் கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்திலும், 21 மற்றும் 11வது வார்டுகளுக்கான பாக முகவர்கள் கூட்டம் கலைஞர் அரங்கிலும் நடைபெற்றது. இக்கூட்டங்களில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
உடன் தொகுதி பார்வையாளர் திரு. இன்பா ரகு, மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ஜெயக்குமார், வட்டச் செயலாளர்கள் திரு. ரவீந்திரன், திரு. தெய்வேந்திரன், திரு. ராஜாமணி, திரு. முனியசாமி, திரு. கனகராஜ், திரு. காளிதுரை, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி. ஜான்சிராணி, திருமதி. ஜாக்குலின் ஜெயா, மாவட்ட பிரதிநிதிகள் திரு. நாராயணன், திரு. செல்வகுமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர் உள்ளிட்டோர்.!