Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

தூத்துக்குடியில் பிப்ரவரி 9ம் தேதி கணினி பட்டா சிறப்பு முகாம் : அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

February 5

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வசித்துவரும் குடியிருப்புதாரர்கள் கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 9ம் தேதி நடைபெறுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கிரைய பத்திரம் வைத்திருந்து குடியிருந்து வரும் குடியிருப்புதாரர்கள் மற்றும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வைத்திருப்பவர்கள் இதுவரை கணினி பட்டா பெறாத குடியிருப்புதாரர்கள் கணினி பட்டா பெறுவதற்கான தங்கள் மனுக்களை 09.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பெற்றுக்கொள்ளவுள்ளார்.

எனவே, கணினி பட்டா பெறுவதற்கான மனுக்கள் வழங்கும் நபர்கள் கிரையப் பத்திர நகல் அல்லது அரசு வழங்கிய பட்டா மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகிய ஆவணங்களுடன் கணினி பட்டா பெறுவதற்கு மனுக்களை அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Details

Date:
February 5