
தளபதியின் பெண் சிங்கம் – தூத்துக்குடியின் பெருமை
அரசியல் என்பது சாமான்ய செயல் அல்ல – அது சர்வ வல்லமையை நாடும் அர்ப்பணிப்பு நிறைந்த போராட்டம். அந்த போராட்டத்தில் ஆண்களுடன் இணைந்து, சமமாகச் சென்று, மாவட்டத்தை தலையெழுத்தாக எடுத்துச் செல்வது ஒரு பெண்ணுக்கேற்ற சவாலான பயணம்.
அந்த சவாலை மிகுந்த நம்பிக்கையோடும், உழைப்போடும் சமாளித்து வரும் தலைவர் தான் அக்கா பெ. கீதா ஜீவன்.
தந்தையின் அரசியல் மரபை வாரிசாக ஏற்று, விசுவாசத்தையும் கடமை உணர்வையும் தழுவி, ஒவ்வொரு தேர்தலிலும் தன்னை நிரூபித்து வரும் சாமர்த்தியசாலி.
அரசியல் என்பது தொடங்குவது போல எளிதல்ல, தொடர்வது தான் சாதனை.
அக்கா செய்தது அதை விடச் சிறந்தது – கழக நம்பிக்கையுடன் மக்களுக்கான தீவிர சேவை.
தூத்துக்குடியில் “நீ செஞ்சுருவியா? இல்லை #கீதாக்காவுக்கு சொல்லனுமா ?” என்பது மக்களின் உணர்வாகிவிட்டது.
அந்த அளவுக்கு மக்கள் நம்பிக்கையை மற்றும் பெரும் ஆதரவை பெற்றவர்.
இது பெண்ணின் சாதனை மட்டுமல்ல – இது தளபதியின் பெண் சிங்கத்தின் வெற்றிக் குரல்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் ஒவ்வொரு நிஜ திமுக தொண்டனும் பெருமைப்படும் பெயர் – #அக்கா_கீதாஜீவன்.