தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் நமக்கு தேவையா? என்று அமைச்சர் கீதாஜீவன் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி 20வது வார்டு செல்வநாயகபுரத்தில் நடைபெற்ற திமுக கொடியேற்றும் விழாவில் வடக்கு மாவட்ட செயலாளர், சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொணடு கொடியேற்றினார். விழாவில் அவர் பேசுகையில் “தமிழ் மொழிக்கும், தமிழா்களின் வளர்ச்சிக்கும், தடையாகவும் இருந்து கொண்டு சட்டப்பேரவையில் தேசியகீதம் ஒலிக்க வில்லைஎன்ற தேவையற்ற கருத்துக்களை கூறி தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநர் நமக்கு தேவையா?
இதுபோல் பல இடையூறுகளை ஏற்படுத்தி பலர் பணியாற்றுகின்றனர். அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. வேலைவாய்ப்பு மகளிா் உாிமைத்தொகை புதுமைப்பெண் தமிழ்புதல்வன் என எல்லா வகையிலும் சாதனைகள் தொடர்கின்றன. இதையெல்லம் பொறுக்க முடியாமல் சிலர் உள்ளனர். எதிர்கட்சிகள் குறைகளை சொல்லமுடியவில்லை.
நாங்கள் இருக்கிறோம் என்ற இருப்பிடத்தை காட்டுவதற்கு குறை சொல்கின்றனர். மக்களாகிய நீங்கள் திமுக ஆட்சியில் எவ்வளவு சாதனை செய்துள்ளோம் என்பதை அறிவீர்கள் உாிமைத்தொகை விடுபட்டவர்களுக்கும் முறைப்படுத்தி வழங்கப்படும் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஜாதிமதம் கடந்து தமிழக மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றி வரும் தமிழக முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று பேசினாா்.
விழாவிற்கு வட்ட செலயாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், முன்னாள் கவுன்சிலர் ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், வட்ட அவைத்தலைவர் அற்புதராஜ், செயலாளர் முனியசாமி, வட்டப்பிரதிநிதி அருணகிாி, நிர்வாகிகள் ராஜா, ராமமூர்த்தி, இசக்கி, மல்லிகா, கணேசன், காளிமுத்து, பொியசாமி, பாக்கியத்துரை, சிவசுந்தா், கேபிள்சாம், தெய்வம், தங்கபாப்பா, சண்முகசுந்தரம், செந்தூர்பாண்டி, ராஜ்குமாா், ஜெயபாண்டி, விஜயன், குமாஸ்தா பாலசுப்பிரமணி, சிவகுருசாமி, மற்றும் கருணா மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.