விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 716 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கான வேலை உத்தரவினை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம், மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கான வேலை உத்தரவினை புதூர் தனியார் திருமண மண்டபம் மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 716 பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்மார் கண்டேயன் தலைமைத்தார்.
நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், தங்கவேல், விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், ராமசுப்பு, அன்புராஜ் சின்னமாரிமுத்து, பொதுகுழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, பாண்டியராஜன், புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதாஅழகுராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.