Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

இந்தித் திணிப்பு; நிதிப்பகிர்வில் பாரபட்சம்; தொகுதி மறுசீரமைப்பில் அநீதி : எட்டையபுரத்தில் மத்திய பாஜக அரசிற்கு கண்டனம்!

March 11

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எட்டையாபுரத்தில் நடைபெற்ற மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
கூட்டத்திற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  மதியழகன் தலைமை வகித்தார்கள். தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன் பிரதீப் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தின் இறுதியில் மாற்றுக்கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் ஊடகவியலாளர் மில்டன் கழக இளம்பேச்சாளர்  சக்திவேல்முருகன் விளாத்திகுளம் தொகுதி  பார்வையாளர், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன்,  விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதி கணேசன், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தலைமை கழக பேச்சாளர்கள் சரத் பாலா, தமிழ்ப்பிரியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்  சௌந்தரராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன்,
முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், நடராஜன், எட்டையாபுரம் பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் உட்பட மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

Details

Date:
March 11