அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எப்போதும் முன்னிலை வகிக்கும் அன்பு அக்கா : அமைச்சர்
Geetha Jeevan MLA – DMK 
இது வெறும் புகழ்ச்சிக்காக சொல்லப்பட்ட வார்த்தைகள் அல்ல..
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று தினங்களாக (16, 17 மற்றும் 18.10.2024) நடைபெற்றது. முதலில் இரண்டு தினங்கள் மட்டும் இந்த முகாம் நடத்துவதற்குத் தான் திட்டமிடப்பட்டது. ஆனால் முதல் நாள் இந்த முகாமிற்கு பார்வையிட வந்த மாண்புமிகு அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் பொதுமக்களிடையே இருந்த ஆர்வத்தையும், வருகை புரிந்த கூட்டத்தையும் பார்த்தபோது, உடனடியாக முகாம் மேலும் ஒரு நாள் நீட்டிப்புச் செய்து நடத்தப்படும் என்று அங்கேயே அறிவித்தார். அதற்கு தகுந்த காரணமும் இருந்தது.
இப்படி ஒரு முகாம் நடைபெறுகிறது என்றும், அதற்கு மாண்புமிகு அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் அவர்கள் முழு ஒத்துழைப்பையும் வேண்டிய உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்து தருகிறார் என்று தெரிந்தவுடன், பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வருகை தந்தனர்.
இதற்கு முதற்காரணம் தூத்துக்குடி மக்கள் அமைச்சர் கீதாஜீவன் மீது வைத்திருந்த நம்பிக்கை.!
“நாம் எதை எதிர்பார்த்துச் செல்கிறோமோ.!? அதை நிச்சயம் எப்பாடுபட்டேனும் நிறைவேற்றித் தருவார் அமைச்சர் கீதாஜீவன்” என்று அந்த மக்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர், தேநீர் மற்றும் உணவு அனைத்தையும் தங்கு தடையின்றி முகாம் நடந்த மூன்று தினங்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
சிற்சில சலசலப்புகள் இருந்தாலும், பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து முகாம் வெற்றிகரமாக நடைபெற உறுதுணையாக இருந்தனர். முகாம் நடைபெற்ற மூன்று தினங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்கு அனைத்து வழிமுறைகளையும் நிறைவேற்றி காப்பீடு அட்டைகளைப் பெற்றுச் சென்றனர்.
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக முகாமின் இறுதி நாளில், வெற்றிகரமாக அந்த முகாம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து தங்கள் உழைப்பையும் பங்களிப்பையும் தந்த அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் மாண்புமிகு அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் தெரிவித்தார்.!