தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள டைட்டல் நியோ பார்க் கட்டுமான பணிகளை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
தொழில் வளர்ச்சி என்பது மாநிலத்தின் ஒரு பகுதியில் மட்டும் இருக்க கூடாது. எல்லா பகுதிகளிலும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்ர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆசை. அதன்படி தூத்துக்குடியில் இந்த டைட்டல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் 2023 மே மாதம் துவங்கப்பட்டு 16 மாதத்தில் முடிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் முதலமைச்சரால் திறக்கப்பட உள்ளது.
இதனை நேரில் ஆய்வு செய்ய நானும், மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் கீதா ஜீவனும் வந்துள்ளோம். தென்தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகதான் வின்ஃபாஸ்ட் கார் உற்பத்தி நிறுவனம் தூத்துக்குடியில் நிறுவப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இத்தொழிற்சாலையில் இருந்து மின்சார வாகனங்கள் உற்பத்தியாகி விடும். தூத்துக்குடி பகுதியில் கூடுதலாக மிகப்பெரிய முக்கிய தொழிற்சாலைகள் வர இருக்கிறது. அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார்.
இதனால் உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து முதலமைச்சரின் ஒன் ட்ரில்லியன் டாலர் கனவு நிறைவேற உதவியாக இருக்கும். தொழில்துறையில் தமிழகத்தின் போட்டி என்பது மற்ற நாடுகளோடுதான், இந்திய மாநிலங்களோடு அல்ல. படித்த இளைஞர்களுக்காக சொந்த இடத்திலேயே வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் ஐ.டி பார்க் துவங்கப்பட்டது. துறைமுக நகரமான தூத்துக்குடியில் தற்போது டைட்டல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது, இதனால் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட அனைத்து திட்டங்களையும் மேற்பார்வையிட்டு கண்காணிக்க முதலமைச்சர் குழு அமைத்து என்னை அந்தக் குழுவின் தலைவராக நியமித்து பல முக்கிய துறைச் செயலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட நிறுவனங்கள் பற்றிய அறிக்கைகள் முதல்வருக்கு மாதந்தோறும் அளிக்கப்பட்டு வருகிறது. இது விடியல் ஆட்சி, முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி, நாங்கள் சொல்வதை நிச்சயம் செய்வோம் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர் பிரபு, டைடல் பார்க் செயற்பொறியாளர் பாலாஜி ராஜகுரு, தாசில்தார் முரளிதரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மண்டல தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ்,அன்னலட்சுமி,கலைச்செல்வி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் மு.விஜயகதிரவன், ஒன்றிய கழக செயலாளர்கள் பீக்லிப்பட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், கருப்பசாமி மற்றும் மகளிரணிமாவட்டஅமைப்பாளர்கவிதா தேவி, பகுதி கழக செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார்,மேகநாதன்,மாவட்டதகவல்தொழில்நுட்பஅணிஒருங்கிணைப்பாளர்கள் தூத்துக்குடி வடக்கு அபிராமி நாதன், தெற்கு பேரின்பராஜ் லாசரஸ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், பழனி குமார், திருச்செந்தூர் நம்பிராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் தூத்துக்குடி சி.என்.அண்ணாதுரை, விளாத்திகுளம் ஸ்ரீதர், கோவில்பட்டி ஹரிஹரன், வைதேகி, அஸ்வின் துரை, கரன், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பச்சி ராஜ், ராஜேந்திரன், ஜெயசீலி, மற்றும் மாரிமுத்து மற்றும் துறை சார்ந்த அலுவலரகள் உடன் இருந்தனர்.