துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரம் அணிவித்தார்.
துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தங்க மோதிரங்கள் அணிவித்தார்.
நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, பவானி, நாகேஸ்வரி, வைதேகி, ஜெயலட்சுமி, வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, செந்தில்குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் டி கே எஸ் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அருணா தேவி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல், மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வினோத், துணை அமைப்பாளர் மகேஸ்வரன், மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..