தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் அரசு சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் கலெக்டர் இளம் பகவத் உள்ளிட்டோர் அஞ்சலி
தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்த சந்தனராஜ் என்பவரின் உடல் உறுப்பு தானம் செய்வதாக முதன் முறையாக அரசு மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியதை எடுத்து சந்தன ராஜன் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அவரது உடலில் உள்ள உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது
இதனை அடுத்து உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை அடுத்து அரசு சார்பில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் அரசு சார்பில் உடல் உறுப்பு தானம் செய்த சந்தன ராஜ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
அதன் பின்பு மாநகராட்சி மேயர் ஜெகன் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவர் அரசு மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் மற்றும் அரசு மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர் சந்தனராஜ் குடும்பத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட ஆறுதல் தெரிவித்தனர்
முதன்முறையாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சந்தனராஜ் என்பவர் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது