Geetha Jeevan MLA-DM
Loading Events

« All Events

  • This event has passed.

நெல்லை விழாவிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு – அமைச்சர்கள், கலெக்டர்கள், எம்எல்ஏக்கள், மேயர்கள் பங்கேற்பு

February 6

திருநெல்வேலியில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு இன்று வியாழக்கிழமை வருகை தந்த முதல்வருக்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை 11.25 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் இளம் பகவத், மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு ஆகியோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு, சபாநாயகர் அப்பாவு, எம்.பி. ராபர்ட் புரூஸ், எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, அப்துல் வகாப், ரூபி மனோகரன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான், முன்னாள் எம்எல்ஏக்கள் முத்துலெட்சுமி, டேவிட்செல்வின், நெல்லை மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், முன்னாள் மேயர் சரவணன், நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை சரக டிஐஜி மூர்த்தி ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி வரவேற்றனர்.

பின்னர் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், இராஜா, மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, மும்மூர்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீதக்கண்ணன், அன்புராஜன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், மதியழகன், குபேர்இளம்பரிதி, கவிதாதேவி, அபிராமிநாதன், சீனிவாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, பார்வதி, பெனில்டஸ், பிரதீப், நிக்கோலாஸ்மணி, நாகராஜன், ராதாகிருஷ்ணன், டினோ, அருண்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன்ஜாக்கப், அருண்சுந்தர், பரமசிவம், கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆனந்த சேகர், ரூபஸ், ரூபராஜா, முருக இசக்கி, ஜெயக்கனி, ரவி, செல்வின், பிரவீன்குமார், வினோத், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், நாராயணவடிவு, பகுதி இளைஞர் அணி அமைப்பாளரகள்; சூர்யா, செந்தூர்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வகுமார், சேர்மபாண்டியன், ராஜ்குமார், கவுன்சிலர்கள் இசக்கி ராஜா, சரவணக்குமார், வைதேகி, சுப்புலெட்சுமி, ஜாண்சிராணி மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஆறுமுகபெருமாள், ஜெபதங்கம் பிரேமா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், முத்துச்செல்வன், இந்திரகாசி, ஆறுமுகபாண்டியன், ராஜலெட்சுமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம், அருண்குமார், ரவி என்ற பொன்பாண்டி, சாரதா பொன்இசக்கி, செல்வகுமார், ரகுராமன், வீரபாகு, ஜான்பாண்டியன், துறைமுகம் ராமசாமி, ஜனஹர், சுரேஷ், ராஜேஷ், ஆனந்த், மகாவிஷ்ணு, ஸ்ரீதர்ரொட்ரிகோ, சுரேஷ்குமார், ரங்கநாதன் என்ற சுகு, கலீல் ரகுமான், செல்வபெருமாள், ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், சுதாகர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கணக்குக்குழு தலைவருமான ரெங்கசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், பாலசிங், இளங்கோ, நவின்குமார், சதீஷ், ரவி, கொம்பையா, கோட்டாளம், பார்த்திபன், ஜோசப், ரமேஷ், பாலமுருகன், பொன் முருகேசன், இளையராஜா, சரவணக்குமார், ராமசாமி, சுரேஷ்காந்தி, பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், பேரூர் செயலாளர்கள் இளங்கோ, ராயப்பன், சுப்புராஜ், நவநீதமுத்துக்குமார், கண்ணன், கோபிநாத், ராமஜெயம், முத்துவீரபெருமாள், நவநீதபாண்டியன், ஜமீன் சாலமோன், மால் ராஜேஷ், முருகானந்தம், ஒன்றிய துணைச்செயலாளர் வக்கீல் நாராயணன், கணேசன், ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள்; வெயில்ராஜ், தர்மராஜ், பூபேஸ்நாதன், நகர செயலாளர் சுடலை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்றனர்.

முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கண்ணப்பன், கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தலைமைச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடன் வந்தனர்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர், கார் மூலம் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்று விழாவில் கலந்து கொண்டார்;. முதல்வர் வருகையையடுத்து விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Details

Date:
February 6