பள்ளிக்கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 2024-25 மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திருமதி. கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினார்.
உடன் கூடுதல் ஆட்சியர் செல்வி. ஐஸ்வர்யா இ.ஆ.ப., முதன்மைக் கல்வி அலுவலர் திரு. கணேசமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க நிலை) திரு. பாஸ்கரன், திரு. அன்றோ ரூபன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திரு. கண்ணன், உதவித்திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – தூத்துக்குடி மாவட்டம்) திரு. முனியசாமி மற்றும் மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் திருமதி. கலைச்செல்வி, பகுதி திமுக செயலாளர் திரு. சுரேஷ்குமார் உள்ளிட்டோர்.!